SG Ruminations Vol 1 by Sabari Ganesh (best thriller books to read .TXT) 📕
Read free book «SG Ruminations Vol 1 by Sabari Ganesh (best thriller books to read .TXT) 📕» - read online or download for free at americanlibrarybooks.com
- Author: Sabari Ganesh
Read book online «SG Ruminations Vol 1 by Sabari Ganesh (best thriller books to read .TXT) 📕». Author - Sabari Ganesh
எது கடமை? கடவுளை அறிவதே கடமை. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளார். நாம் கடவுளிலேயே நிலைபெற்று உள்ளோம். மனசாட்சி எனும் புத்தியின் விருத்தி மூலமாய், அதற்கு அடிப்படையாகவும், அதற்கு அப்பாலாகவும் உள்ள பேரறிவு தான் ஆத்மா.
எல்லாம் சங்கல்பம். நினைப்பு. அதனால்தான் பிறப்பு. புணர்ந்த பாவமெல்லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழி பட ஓடும். குருவின் அருள் இருந்தால், சம்சார வெள்ளமும் முழங்கால் அளவே.
எவன் இருப்புள்ள அனைத்தையும் ஆத்மாவினிடத்திலேயே பார்க்கிறானோ, இருப்புள்ள அனைத்தினிடத்தும் ஆத்மாவை பார்கிறானோ, அப்போது எதையும் வெறுப்பதில்லை.
எப்போது இருப்புள்ள அனைத்தும் ஆத்மாவாகவே ஆகிவிட்டதோ, அப்போது ஒற்றுமையை கண்ட அவனுக்கு மயக்கமேது? துக்கமேது?
SGR49தேவ பூஜை
எது எது போய்விடுகிறதோ, அதை விட்டு விட்டு, எது எது கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொண்டு, எவ்வித மனோவிகாரங்களும் இல்லாமல், எல்லாம் ப்ரஹ்மமே என்ற தீர்மானத்துடன் இருப்பதே உத்தமமான பூஜை. வந்தாலும் ஏன் என்ற கேள்வி இல்லை, போனாலும் ஏன் என்ற கேள்வி இல்லை. ஸ்தித ப்ரக்ஞன்.
ஜீவ காருண்யம் இல்லாமல் தெய்வீக வாழ்க்கையில் முன்னேற முடியாது. உற்றார் உறவினரிடம் உண்டாகும் வாஞ்சை மாயை. எல்லா ஜந்துக்களிடமும் உண்டாகும் வாஞ்சை தயை..
ஈஸ்வரன், குரு, ஆத்மா இம்மூன்றும் ஒன்றே. மூர்த்தி வேறாக தோன்றினாலும், ஆகாசத்தைப்போல் நீக்கமற நிறைந்த அகண்ட சச்சிதானந்த வடிவமே குருவின் உண்மை வடிவமாகும். தனது மனமாகிய மலரை குருபாதங்களில் பூரணமாக சமர்பித்துவிடுவது கடினம். ஆனால் அதுதான் மிகவும் சிறந்தது. அதற்கு பெயர் தான் சிரத்தை.
நான் செய்வது ஏதும் இல்லை., நான் என்பதே இல்லை., எல்லாம் அவன் செயல்., தேவா... சத்குரு மூர்த்தியின் பாதுகைகளில் இருந்து தான் ஓம்கார மூர்த்தியை (ஆத்மசாக்ஷாத்காரத்தை) அடைய முடியும். குருவின் துணை இன்றி அதை நேரிடையாக அடைய முடியாது. ஏனவே குரு பாத சேவை தான் முக்கியம். யானைக்கு தும்பிக்கை எப்படியோ அப்படியே மனிதருக்கு நம்பிக்கை.
கடவுளை தமது ஸ்வரூபத்திலேயே கண்டவர், வேறு எதையும் விரும்புவது இல்லை., கடவுளையும் விரும்புவது இல்லை. எவ்வளவு அழகிய மேனி இருந்தால் என்ன., எவ்வளவு அழகிய மனைவி-மக்கள் இருந்தால் என்ன., ராஜ்ஜியம்., வித்யை., எல்லாம் இருப்பினும்., ஸ்ரீ குருவின் பாதங்களில் மனம் லயிக்காவிட்டால் எல்லாம் வீணே.
வித்தைக்கு அணிகலன் விநயமே. எல்லாவற்றிற்கும் பாவனை வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே நம்பிக்கை.
SGR50திருமந்திரம்:
தெளிவு குருவின் திருமேனி காணுதல்,தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,தெளிவு குருவின் திருநாமம் செப்புதல்,தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
தியானத்திற்கு மூலம் குருவின் வடிவம், பூஜைக்கு மூலம் குருவின் திருவடி, மந்திரத்தின் மூலம் குருவின் திருவாக்கு, மோக்ஷத்தின் மூலம் குரு க்ருபை.
ஸகுண உபாஸனையின் எல்லை குருவை தமது இஷ்ட தெய்வமாக காண்பதுதான். சத்குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு, பராபரகுரு.
பெரும் பேறு வேண்டுபவன் ஆத்மஞானியை பூஜிக்க வேண்டும். - முண்டக உபநிஷத். ஆத்மஸாக்ஷாத்காரதிர்க்கு குருவை சரண் அடைவதை தவிர வேறு உபாயம் இல்லை. குரு பக்தியால் அடையமுடியாதது ஏதுவும் இல்லை.
சிஷ்யன் குருவின் நினைவுடன் அவரது திருவடிகளில் சரண் அடைந்தால்., குரு அருள் தக்க காலத்தில் தானாகவே கிடைக்கும். மெய்பொருளின் தரிசனத்திற்கு கடைசி படியாக அமைவது குருநாதரின் தரிசனமே.
தியானம் ஒன்றே முக்கியமான ஞானஸாதனமாகும். பூஜை, ஜெபம், தவம், தியானம். ஆத்மாவை அறிவது எப்படி என்றால்,அதை அறிய வேண்டாம்,ஏன் ஏனில் அதை அறிய முடியாது. மற்ற அனாத்ம வஸ்துக்களை அறிவதை நிறுத்தினால் போதும், ஆத்மா தானாகவே பிரகாசிக்கும். ஆத்மஸ்வரூபம் தான் நம்முடைய அறிவின் உதயஸ்தானமாக இருக்க வேண்டும்., மனம் அல்ல.
ஆத்மாவை தவிர வேறெதுவும் நிஜமல்ல. நிஜமாக தோன்றுவதெல்லாம் ஆத்மாவின் நிஜதன்மையால் அவ்வாறு தோற்றம் அளிக்கின்றன.. ஆத்மாவை அறியாதிருப்பதை காட்டிலும் கொடிய வியாதி வேறு இல்லை. எப்போதும் ஞானி ஆத்மாவையே காண்கிறான்.
ImprintText: Sabari Ganesh
Images: Sabari Ganesh
Cover: Sabari Ganesh
Editing: Sabari Ganesh
Translation: Sabari Ganesh
Layout: Sabari Ganesh
Publication Date: 11-26-2019
All Rights Reserved
Comments (0)