American library books » Poetry » அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕

Read book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕».   Author   -   Otteri Selvakumar



1 2 3 4
Go to page:
வெட்கம்

 காய்கிறது வெய்யில்
அடிகிறது மழை
கொசுவாய்

குடைக்கு வந்துவிட்டது

வெட்கம்

விற்பனை

 அவள் கவிதை 
அல்ல
என் கற்பனை
மதுவிற்க்கு 
அவள் மறைமுக
விற்பனை

மீசை

மீண்டும் 
ஜல்லி கட்டுக்கு
தடை
சரி
தமிழனுக்கு
மீசை 
இனி எதுக்கு?

 

உண்மை

அம்மா
வார்தை அல்ல
அன்பின் முதல் (க)விதை
என்னமாய் புளுகுகிறார்கள்
கவிதையில்...
படுபாவி கவிகள்

அய்யோ பாவம்
அம்மா
அடுபடியில் இன்னமும்
வெந்து கொண்டு இருகிறாள்
அம்மா

அரிசி சோறாக...

அது அப்படித்தான்

தமிழ்

சினிமாவை விட
ஒன்றும்

மோசமில்லை
அந்த நிர்வாணபடம் 

நீ

பூக்களை விட
நீ அழகாய்
சிரிகிறாய்
என்னிடம்... 

அன்பே

மின்தடை
இருந்தாலும்

பரவாயில்லை
அன்பே

கொஞசம் சிரி

இருட்டுக்குள்

சிகரெட் மாதிரி 

இதுதான்

அன்பே

நீ

சர்க்கரைதான்

எனக்கு மட்டும்

ஏன் ?

கசக்கிராய் ...

இதுதான்

காதல் என்பதா

மனைவி

 அவள் அப்படிதான்

நான் சிரித்தால்

அவள் அழுவாள்

நான் திட்டினாள்

அவள் என்னை அடிப்பாள்

வேலைக்காரி அல்ல

மனைவி

கவிதை

 கொசுக்கடிக்கு

பயந்து போன எனக்கு

எதிர் வீட்டு

ஜன்னலில்

அவள் முகம் பார்க்க

கவிதை வந்து போனது

எனக்கு....

சண்டை

 நான் இப்போதெல்லாம்

தூக்கத்தில் அடிக்கடி

சண்டை போடுகிறேன் 

அவளுடன் மட்டுமல்ல

அந்தக் கொசு விடம் தான்

முத்தம்

உன் முகத்தில்

பருக்களை பார்த்து

ரணமாகிப் போன எனக்கு

ஆறுதலாய் இருக்கிறது

உன் முத்தம் ...

ஓவியக் கவிதை

 முத்தம் ஒரு கவிதைதான்

வார்த்தைகள் இன்றி

உதடுகளால் எழுதப்படும்

ஓவியக் கவிதை

அடி

 நீ செருப்பால்

அடித்தாலும்

உன்னை எப்போதும்

காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்

ஏன் என்று புரிந்துகொள்ள

மறுக்கிறாய்

என் காதலை

சத்தம்

 உன் முத்தத்தை விட

எனக்கு இனிமையாய்

இருக்கிறது மழை தூறலின்

சத்தம்

1 2 3 4
Go to page:

Free e-book: «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (drm ebook reader .TXT) 📕»   -   read online now on website american library books (americanlibrarybooks.com)

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment