American library books » Short Story » ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (romantic novels to read TXT) 📕

Read book online «ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (romantic novels to read TXT) 📕».   Author   -   ஓட்டேரி செல்வ குமார்



1 2 3 4 5
Go to page:

 காலை 10:00 மணி" 

 

பாஸ்கர் அலுவலகத்திற்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்

 

அவர் எதிர்பார்த்து கொண்டிருந்த 7F

பஸ் ஒரு வழியாக வந்தது வந்த பஸ் அவர் நிற்கும் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் வேகமாக டிரைவர் ஓட்டிக் கொண்டு போய்விட்டார் அடக் கடவுளே என்று நினைத்துக் கொண்டேன்

 

பிறகு ஒரு வழியாக பஸ்ஸை பிடித்து அலுவலகத்திற்கு போக அரை மணி நேரம் கடந்து விட்டது

"ஏன்யா லேட்டு?"என்று

அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்

 

"பஸ் ... பிடிக்க தாமதமாகிவிட்டது" என்று சொன்னால் அதற்கு பதிலடியாக "இல்லை ...நீதான் லேட்!" என்று முகத்தில் அறிவித்தார்கள்.

 

சரி மௌனமாக இருந்து விடலாம் என்று முடிவெடுத்து பாஸ்கர் மவுனமாக இருந்த தடைகளை பின்புதான் அவருக்கு புரிய வந்தது காலை சிற்றுண்டி வாங்கவில்லை என்கின்ற விஷயம் வழக்கம்போல் வீட்டில் செய்து கொடுப்பது என்று மனைவி புஷ்பா அவர்களுக்கு முடியாததால் என்று வெளியில் சாப்பிட சொல்லி விட்டார்கள் அதை கடையில் வாங்கிவர மறந்து விட்டார் பாஸ்கர்

 

 

உடனே மனைவி புஷ்பாவிற்கு செல்போனில் அழைத்த "புஷ்பா இன்னைக்கு காலைல நான் டிபன் வாங்கிட்டு போல அதனால அப்படியே ஒரு வேளை பட்டினி இருக்கலாம்னு தோணுது நீ வீட்டில சமைச்சு யார்கிட்ட நான் ஆபீஸ்க்கு கொடுத்து அனுப்பு இல்லனா நீயே வந்து சேரு"

 

 

என்று செல்போனில் பேசிவிட்டு பாஸ்கர் தான் இருக்கையில் அமர்ந்து தன் அலுவலக பணிகளை தொடங்கினார் மணி 11 ஆனது அங்கே ஏலக்காய் டீ இரண்டு பிஸ்கட் வந்தது அதை லாவகமாக குடித்துவிட்டு பிஸ்கட் மென்று விழுங்கி கொண்டிருந்தார்.

 

ஒருவழியாக மணி 12லிருந்து ஒன்றாகி எல்லோரும் மதிய சாப்பாட்டிற்கு புறப்பட்டு போய்க் கொண்டிருந்தார்கள் சிலர் கொண்டுவந்த சாப்பாட்டை டேபிளில் வைத்து மெழுகு கொண்டு இருந்தார்கள் 

 

"என்னையா பாஸ்கர் சாப்பிடலையா?

 என்று ரகுராம் கேட்டார்

 

"இன்னைக்கு வீட்ல இருந்து வரும் பா"என்று பதில் தந்துவிட்டு பாஸ்கர் அன்றைய செய்தித்தாளை மெதுவாக எடுத்து படித்துக் கொண்டிருந்தார்

 

மெல்ல தனது ராசிபலனை பார்த்தபோது அவர் ராசிக்கு" தாமதம்"

என்று போட்டிருந்தது

 

அப்படியே மெல்ல தனது டேபிலில் தலை வைத்து தூங்க ஆரம்பித்து விட்டார் பாஸ்கர்

 

பகல் மணி ஒன்றிலிருந்து இரண்டாகியிருந்தது வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதாக சொன்ன மனைவி புஷ்பா இன்னும் வரவில்லை யாரிடமும் மதிய சாப்பாடு கொடுக்கும் அனுப்பவில்லை ஒரு போன் காலும் இல்லை

 

காலையில் வயிறை பட்டினி போட்டது கொஞ்சம் தலை சுற்றல் தான் இருந்தது பாஸ்கருக்கு

 

மனைவி புஷ்பாவிற்கு போன் செய்து பார்க்கலாம் என்று போனை எடுத்த போது அதில் சார்ஜ் போயிருந்தது

 

 

 

மணி 14:30 இருக்கும்

 

 

பாஸ்கர் மனைவி புஷ்பா ஒரு பையுடன் விறு விறு வென்று டென்ஷனாக ஓடிவந்தார்.

 

 

"ஏண்டி இவ்வளவு லேட்டு ..."என்று பாஸ்கர் கேட்க

வீட்ல கேஸ் தீந்து போச்சு அதனால பக்கத்தில் இருந்த ஓட்டலில் உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கிறேன்

 

 

"ஹோட்டல் சாப்பாடா... வெறுத்துப்போன பாஸ்கர் அதுக்கு எதுக்கு லேட்டா வந்த?"

 

"உங்களுக்கு போன் பண்ணா... போனே எடுக்கல... நான் என்ன செய்யட்டும்?

 

 

 நீங்க சாப்டீங்களா .. என்னாச்சு ஏதாச்சு எல்லாம் பயந்து ஓடி வந்தேன் என்று சொன்னால் புஷ்பா.

 

"போயும் போயும் லேட்டா வந்து...

என்ன கத்த

 விட்டுடிட்டு இருக்குற?

வாய மூடி தொலைடி..."

என்று சத்தம் போட்ட பாஸ்கர் குரலில் பசியும் + டென்ஷனும் மிச்சமிருந்தது.

 

அது புஷ்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை

 

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

 

 

 

 

 

 

 

 

இதுதான் உலகம்

 அம்மா மேகலா சமையல்கட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார் அப்பா இன்றைய செய்தித்தாளை மெல்லமாக வாசித்துக்கொண்டிருந்தார்

 

தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சினிமா பாடல் ஓடிக்கொண்டிருந்தது

 

வழக்கமாக ஆறு மணிக்கெல்லாம் நான் அலுவலகம் கிளம்பி விடும் குமார் மிரண்டு போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்

 

 

 காரணம்...

 காலை மணி 11 ஆகியிருந்தது 

 

 

அப்படி ஒரு தூக்கம் அவனுக்கு காலையில் நாஸ்டா கூட சாப்பிடவில்லை அப்படியே 

 

 

இரவு 9 மணிக்கு படுத்து அவன் காலை 11 மணிக்கு தான் எழுந்தான்

 

முன்பெல்லாம் ஆறு மணிக்கு எழுந்து இருக்காவிட்டால் அம்மா சத்தம் போடுவாள் அப்பா சத்தம் போடுவார் "எழுந்திரிடா குமார்" என்று இன்று யாரும் அப்படி சத்தம் போடவில்லை.

 

 

காரணம் குமார் ஒரு நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு போய்விட்டான் அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாரும் சத்தம் போடவில்லை அதனால் தான் ஒரு பெரிய தூக்கம் போட்டு எழுந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் குமார்

 

உருப்படாதவன் சோம்பேறி என்று வாய்க்கு வந்த வார்த்தைகளால் தன்னைக் திட்டி தீர்க்கும் அம்மாவும் அப்பாவும் மௌனமாய் இருந்தது குமாருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.... என்றாலும்

 

குமார் இப்போது சம்பாதிப்பதால் குடும்பத்தை காப்பாற்றும் செலவுகளை கவனித்துக் கொள்வதால் குமாரை யாரும் திட்ட வில்லை என்பது குமாருக்கு புரிந்தது

 

 

அது சரி ....இவ்வளவு நாள் உருப்படாத நான் வேலைக்கு போனதும் உரு பட்டுவிட்டன ?

 

 

என்னடா ...இது நம்ம ஒழுக்கத்தை பத்தி இவ்வளவு கீழ்த்தரமாக கணக்கு போட்டு இருக்காங்க நம்ம வீட்டார் என்று அவன் மனசு முழுக்க அலைபாய்ந்து கொண்டிருந்தது...

 

அதில் அர்த்தம் அதிகம் இருந்தது அது மட்டும் உண்மை...

 

 

அர்த்தம் இருந்ததோ இல்லையோ ஆனா இப்படி எல்லாம் தினமா லேட்டா எழுந்து வ்டுவது உடம்புக்கு நல்லதில்லை மனசுக்கும் நல்லது இல்ல அதான் சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் நைனா

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

தெரு கிரிக்கெட்

 அசார் தெருவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர்கள் ஸ்டம்ப் என்கின்ற பெயரில்

 

மூன்று குச்சிகளை நட்டு கிரிக்கெட் விளையாடுவார்கள் என்னமோ பிரமாதமாய் பேட்டிங் செய்பவர் பந்து அடிக்க...

 

அது பக்கத்து வீட்டில் போய் விழ அங்கு ஒரே ரகளை குரல்கள் தான் இந்த வாரமும் இப்படித்தான் ஆரம்பமானது அந்த ஆரவார கிரிக்கெட்

 

ராஜு வேகமாய் பந்துவீச

கிரிக்கெட் பேட்டி எடுத்து விளாசிக் கொண்டிருந்தான் விமல்

 

இந்த விமல் பையன் எப்படி ஆச்சு அவுட்டாகி விட னும் என்று மனக்கணக்கு போட்டு ராஜு சற்று வேகமாக சில சமயம் மெதுவாக பந்துகளை வீசி கொண்டிருந்தான்

 

 விமல் அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓங்கி ஓங்கி அடித்து பில்டிங் செய்பவர்கள் எல்லாம் ஓட விட்டான் விமல்

 

ராஜீவ் வேண்டுமென்றே பந்தை சற்று மெதுவாக போட அதுதான் நேரம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விமல் பந்தை ராஜீவ் வீட்டு கண்ணாடி ஜன்னலை நோக்கி ஓங்கி அடித்தான்

 

அவ்வளவுதான் ராஜி வீட்டு கண்ணாடி ஜன்னல் சுக்குநூறாக உடைந்தது "டேய் யார்ரா அது என்னங்க நடக்குது..." என்று ராஜூ அப்பா பிரசாத் சத்தம் போட ஆரம்பி த்தார்

 

தனது வீட்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து பார்த்து திடுக்கிட்ட ராஜூ நமக்கு எதுக்கு வம்பு ? என்று அங்கிருந்து தலைமறைவாகி தனது வீட்டிற்குள் ஓடி விட்டான்.

 

" எப்போ இப்படித்தான் இந்த பசங்க தெருவில் கிரிக்கெட் விளையாடிய கண்ணாடியை உடைக்கிறது.

 

 

தலை மண்டை உடைகிறது இப்படி எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு இதெல்லாம் எப்படி திருந்த போதோ என்று தெரியலையே' என்று கத்திக்கொண்டு வெளியே வந்தார் ராஜீவின் அம்மா சந்தியா

 

பவுலிங் போட்ட ராஜீவ் கொலைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே ராஜீவின் வீட்டு கண்ணாடி ஜன்னல்களை கட் ஷாட் அடித்து உடைத்த விமல் மனசுக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்

ஆனால் ...

 

முகத்தை மட்டும் அழுவது மாதிரி பாவனை செய்து கொண்டிருந்தான்

 

பெத்தவங்க ஒழுங்கா பிள்ளைகளை வளர்த்து இருந்தா இப்படி தெருவுல கிரிக்கெட் விளையாடி கண்ணாடியை உடைக்கிறது ஜன்னலை உடைக்கிறது மண்டையை உடைக்கிறது எல்லாம் நடக்குமா ?என்று முணு முனுது கொண்டு போய்க் கொண்டிருந்தார் 

விமலின் பக்கத்து வீட்டு தாத்தா அமித் லால்.

 

 

உடனே ஒரு சிறுவனின் பின்னால் இருந்து வந்த குரல்

 

 

 "அமித்  லால் தாத்தா முடிஞ்சா நீங்களும் எங்க கூட  வந்து கிரிக்கெட் விளையாடித் பாருங்க அப்புறம் தெரியும் அதனுடைய அருமை"

 

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

 

 

 

 

 

 

 

 

அம்மா

 குழந்தை வித்யா அழுதுகொண்டே இருந்தாள் அப்போது அவள் பசிக்கு பால் கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் அவளது தாய் சுமி என்கிற சுமித்ரா

 

 

வறுமைநிலை ஆனால் உடலில் போதிய தெம்பில்லை ஊட்ட சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்ளாததால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விட்டது

என்று மருத்துவர்கள் சொல்ல...

 

 அதனால் "என் செல்லத்துக்கு பசிக்கு கூட பால் தர முடியவில்லையே" என்று கண்ணீர் மல்க மனதிற்குள் கலங்கி கொண்டிருந்தால் சுமித்ரா

 

சுமத்திரா நான்கு இடங்களில் வீட்டு வேலை செய்து கொண்டு வயிற்றை கழுவிக் கொண்டு இருந்தாள் அவள் கணவன் வெளியூரில் வேலை பார்ப்பதாக சொல்லி போனவன் ஒன்றரை வருடம் ஆகிவிட்டது இன்னும் வீடு திரும்பவில்லை அதற்கிடையில் ...

 

சுமித்ரா வித்யாவை பெற்றெடுத்தாள் அவளை பெற்று எடுத்தது மட்டும் பெரிய பெயரே தவிர வித்தியாவிற்கு தேவையான தாய்ப்பாலை அவளால் தர முடியவில்லை என்பது அவளுக்கு பின்னாளில் புரிய வந்தது ...

என்ன செய்வது?

 

சுமிதராவுக்கு போதிய ரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் தாய்ப்பால் சுரப்பு என்பது குறைவாகவே இருந்தது அதோடு கூட ஒரு சமயம் சுமித்ரா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது பாலுக்கு பதிலாக அவ ரத்தம் கசிந்தது அதைப் பார்த்து திடுக்கிட்டுப் போன சுமத்திரா அன்றிலிருந்து தன் குழந்தைக்கு பால் கொடுக்க கூட மிகவும் யோசித்துக் கொண்டிருந்தாள்

 

அப்படி இருக்கையில் என்று குழந்தை பெறும் பசிக்காக குறித்து விசாரித்துக் கொண்டிருந்தது அதற்கு உதவியாக பசும்பாலை அவள் பாட்டிலில் நிரப்பி குழந்தைக்கு கொடுத்துவிட்டு அவன் பக்கத்திலேயே மெதுவாக படுத்துக் கொண்டாள் சுமித்ரா

 

ஒரு சில மணி நேரம் கடந்து போயிருக்கும் திரும்பவும் பசியால் 

 குழந்தை வித்யா அழுது கொண்டிருந்தது

 

அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போன சுமத்திரா குழந்தையின் வாசத்திற்கு கட்டுப்பட்டு அவளுக்குத் தாய் பால் தந்தாள்

 

குழந்தை வித்யா பால் குடிக்க குடிக்க தாய்ப்பாலுக்குப் பதிலாக தன் தாய் சுமித்ராவின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருந்தது எதுவும் தெரியாமல்

 

அப்படியே... கண்ணை மூடிக்கொண்டு குழந்தையை பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பிலேயே தன் மூச்சை மெல்ல இழந்து கொண்டிருந்தாள் தாய் சுமத்திரா

 

குழந்தை வித்யா தாய்ப்பால் என்கிற பெயரில் தன் தாயின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க மெல்ல உயிரே விட்டாள் சுமித்ரா

 

தாய் இறந்து போனது கூட தெரியாமல் கண்களை உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கை கால்களை ஆட்டிக் கொண்டிருந்தாள் குழந்தை வித்யா 

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

குழந்தை மனம்

 " சொன்ன பேச்சைக் கேட்பாயா?"

எனது குழந்தையை அடித்துக் கொண்டிருந்தால் அம்மா லீலா

 

"நீ இப்படி அடித்துக்கொண்டே இருந்தா நான் எப்படி கேட்பேன்?

 அமைதியா சொன்னா தான் கேட்க முடியும் ..."என்று அழுத்தமாகச் சொன்னால் குழந்தையும் பிரியா

 

"என்னது ...உனக்கு எல்லாம் அமைதியா சொல்லணுமா! சொன்னா கேட்கிற ஆளா நீ?

என்று அம்மா லீலா குழந்தையைப் பார்த்து கேட்க

 

 

அப்போது குழந்தையின் அப்பா ரவி உள்ளே நுழைய

" குழந்தைகளை அடிக்க கூடாது ன்னு தெரிஞ்சு என்னை அடித்துகிட்டு இருக்காங்க பாருங்க அப்பா ...அம்மா!"

 

 என்று பிரியா அழுதவாறு சொல்ல அவள் அப்பா ரவி கண் கலங்கி நின்றார்

 

"குழந்தையை ஏன் இப்படி அடித்து கொண்டிருக்கிறாய் லீலா?" என்று கேட்டார் ரவி

 

 

"தண்ணீல ...போய் விளையாடதே...

 என்று சொல்லி கேட்க மாட்டேங்குறா.. என்ன செய்ய ?

அதனால்தான் நாலு அடி கொடுத்தேன்" என்றாள் லீலா

 

"அதுக்கு ...

 

குழந்தையை அடித்து தான் சொல்லி கொடுக்க னுமா?

 அன்பா சொல்லி கொடுக்க கூடாதா?

 

அன்பா சொன்னாதான் குழந்தைங்க நல்லா கேட்டுக்கும் ..." என்று சொல்லி மிக மிக அமைதியாக புன்னகை பூத்தார் ரவி

 

 

"சரிங்க... இனிமே குழந்தைகிட்ட அமைதியாக சொல்றேன் அடிக்க மாட்டேன்"என்று ரவியிடம்

லீலா சொல்லி முடிக்க

 

குழந்தை அம்மா அடித்த வலி மறந்து மெல்லியதாக கண்ணடித்து சிரித்தது

குழந்தை பிரியா

 

ஓ... அது தான் குழந்தை மனம்!

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

 

 

 

 

நண்பேண்டா

 ராம - சோமு 

 

இருவரும் ஒன்றாக ஆறாம் வகுப்பில் படிப்பவர்கள் 

அவர்கள் இருவரும் மிகவும் நல்ல நண்பர்கள்

 

ராமு படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன் 

சோமு கொஞ்சம் படிப்பதில் சோம்பேறி என்று சொல்லலாம் ...

 

அப்படி இருக்கும் பட்சத்தில் 

ஒரு நாள் வகுப்பு ஆசிரியர் அறிவியல் பாடங்களை எழுதி வருமாறு சொல்லி இருந்தார் 

 

அது இன்று தான்

 

ராமு இரவெல்லாம் ஒக்காந்து பாடங்களை எழுதி முடித்திருந்தான்.

சோமு பாடங்களை எழுதாமலே விட்டுவிட்டான்.

 

சோமு பாடங்களை எழுதி முடிக்க முடியாமல் விட்டதே ராமுவிடம் வருத்தத்துடன் சொன்னான்.

அதைக் கேட்டதும் ராமு " சோமு ஒண்ணும் கவலைப்படாதடா எல்லாம் பாத்துக்கலாம்"

தைரியம் சொன்னான் ராமு.

 

காலை10:00 பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிட்டது.

ஆறாம் வகுப்பாசிரியர் அறிவியல் பாடத்தை எழுதி விட்டீர்களா? என்று வகுப்புக்குள் நுழைந்ததும் கேட்டார்.

 

"அறிவியல் பாடங்களை எழுதாதவர்கள் எழுந்து நில்லுங்க"

வகுப்பாசிரியர் கண்டிப்புடன் சொல் ல

 

சோமு எழுந்து நின்றான் கூடவே ராமு எழுந்து நின்றான்.  

 

" அப்படின்னா

 நீங்க ரெண்டு பேர் மட்டும் வகுப்பில் பாடம் எழுதலையா?"

 

கையில் பிரம்பு கம்பை எடுத்துக்கொண்டு வந்து ராமுவை முதலில் அடித்தார்

" ஆ.." அலறினான் ராமு

"சார் ராமு வை அடிக்காதீங்க... அவன் பாடம் எழுதிவிட்டான் எனக்காக தான் அவன் பாடம் எழுதலன்னு சொல்லி உங்க கிட்ட அடி வாங்கி விட்டு இருக்கான்" என்று சோமு சத்தமாகச் சொன்னான்

 

"அட ! தப்பு பண்ணிட்டேன்.... ராமு அடிச்சு விட்டோமே? 'என்று வகுப்பாசிரியர் யோசி தவாறு

 

"ஏண்டா ராமா நீ பாடம் எழுதிட்டு ஏன்டா பாடமம் எழுதுதல சொல்லி எழுந்து நின்றராய்?"

 

எல்லாம் சோமு காகதான் சார் என்றா ன் ராமு அழுதவாரு

 

வகுப்பாசிரியர் "என்னது சோமுக்காக வா?"

 

 

 

"அதுதான் பிரெண்ட்ஷிப் சார்' என்று

ராமு சொல்ல வகுப்பாசிரியர் மட்டுமல்ல சோமு கூட திகைத்துப் போனான்

 

 

"ராமு நீ தான் என் உண்மையான நண்பேண்டா "என்று சோமு மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

 

 

 

 

 

 

 

 

 

 

1 2 3 4 5
Go to page:

Free e-book: «ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (romantic novels to read TXT) 📕»   -   read online now on website american library books (americanlibrarybooks.com)

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment